24 660e231357ffb
இலங்கைசெய்திகள்

கோடிக்கணக்கில் வரி செலுத்தாத ஆயிரக்கணக்கானோர்!

Share

கோடிக்கணக்கில் வரி செலுத்தாத ஆயிரக்கணக்கானோர்!

காலத்தில் அதிக இலாபம் ஈட்டி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க வணிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் நுகர்வோரை தொடர்ச்சியாக அறிவூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது இலாபத்தைக் குறைக்க உதவும் என்பதுடன் உணவு இறக்குமதியாளர்களின் பட்டியல், அளவு மற்றும் சுங்க விலை தொடர்பான அறிக்கையை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்திற்கு வழங்குமாறு நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

சட்டவிரோத இலாபம் ஈட்டும் வர்த்தகர்களிடம் இருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உரிய வரிகளை அறவிடுவதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தாதவர்கள் 4479 பேர் உள்ளடங்கியுள்ளதுடன் அவர்களில் 88 பேர் வரியாக ஐநூறு கோடி வரை செலுத்த வேண்டியவர்களாவர்.

நூறு கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாத 90 பேரிடமிருந்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

குறுகிய கால அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதுடன் மாறாக 7000 உரிமப் பிரிவுகளின் கீழ் மட்டுமே இறக்குமதி உரிமங்களை வழங்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் முறைகளின் கீழ் வாடிக்கையாளர் ஒரு பொருளின் இறக்குமதி விலை மற்றும் வணிகர் பெறும் இலாபம் பற்றிய அறிவைப் பெறுவதுடன் சட்டவிரோத இலாபங்களை மட்டுப்படுத்த இது உதவும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் போன்றவற்றிற்கு இந்த பணிப்புரைகளை வழங்கியதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...