ரொஷானைத் தொடர்ந்து விதுரவும் அவுட்???

Vithura Wickramaratne

” அரச பக்கம் இருப்பது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை எடுக்க நேரிடும்.” – என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார்.

மே முதலாம் திகதி முதல் இராஜாங்க அமைச்சு பதவியை துறப்பதற்கு ரொஷான் ரணசிங்க முடிவெடுத்துள்ள நிலையிலேயே, மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் இவ்வாறு அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளார்.

” இடைக்கால அரசொன்றை அமைத்தாவது இப்பிரச்சினையில் இருந்து மீள வேண்டும். கட்சி பேதம் வேண்டாம் . தலைக்கு மேல் வெள்ளம்வரும்வரை இருந்தால் நாடு இருக்காது.

எனவே, இராஜாங்க அமைச்சு பதவி தொடர்பில் விரைவில் முடிவொன்றை எடுப்பேன்.” என்றும் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version