4 40
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Share

இலங்கை வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 4 லட்சத்து 38 லட்சத்து 80ஆயிரம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் குறித்த நபர் இலங்கை வந்துள்ளார்.

நேற்று காலை 11 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி என தெரிவிக்கப்படுகிறது.

அவர் வைத்திருந்த சூட்கேஸில் 04 கிலோகிராம் 388 கிராம் குஷ் என்ற போதைப்பொருள் அடங்கிய 05 பார்சல்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, ​​குறித்த நபரும், அவர் கொண்டு வந்த குஷ் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...

interpol
இலங்கை

இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள்!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட...