22
இலங்கைசெய்திகள்

சிறப்பு நிலையான வைப்பு திட்டம் – அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

Share

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையில் முதியோருக்கான சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை குடிமக்களால் திறக்கப்படும் நிலையான வைப்புகளுக்கு செயல்படுத்தப்படும்.

நிலையான வைப்பு காலம் 12 மாதங்கள் மற்றும் அதிகபட்ச வைப்பு மதிப்பு ஒரு மில்லியன் ரூபாயாகும்.

பொதுவாக வங்கியின் நிலையான வட்டி வீதத்திற்கு மேலதிகமாக வருடாந்தம் 3 சதவீதம் சேர்க்கப்படும் தொகை அல்லது உரிய வங்கியினால் வெளியிடப்பட்ட நிலையான வைப்பு வட்டி விகிதம் ஆகியவற்றில் அதிகமான வட்டி வீதம் செலுத்தப்படும்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....