உமாஓயா கரந்திஎல்ல பகுதியில் நீராடசென்ற நிலையில் ஐந்து பேர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் நேற்று இடம்பெற்றது.
இந்த நிலையில், காணாமல் போன நான்கு பேர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்க்பட்டது.
இந்த நிலையில், காணாமல் போயிருந்த 22 வயதுடைய யுவதியொருவர் சடலமாக இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஹட்டம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 21, 19, 23 வயதுகளை உடைய மூன்று யுவதிகளும், 23 வயதுடைய இளைஞனொருவரும் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பதுளை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஹட்டம்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹட்டம்பிட்டிய பகுதியில் உள்ள உறவினர் வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த சிலரே இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹட்டம்பிட்டி பொலிஸார் எமது தமிழ்நாடி செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டனர்.
#SrilankaNews

