கடலாமை இறைச்சியுடன் யாழில் ஐவர் கைது!

meat 300x225 1

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – முல்லைப்புலவு பகுதியில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி காவலரண் பொலிஸாரினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவர்களிடமிருந்து 25 கிலோ கடலாமை இறைச்சி கைப்பற்றப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

#SriLankaNews

Exit mobile version