20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கடத்திய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோ 200 கிராம் நிறையுடைய 20 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 33 மற்றும் 45 வயதுடைய நீண்டகாலமாக சர்வதேச கடல் எல்லையை மீறியவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
#SrilankaNews
Leave a comment