17
இலங்கைசெய்திகள்

புல்மோட்டையில் கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு: வலுக்கும் கண்டனம்

Share

திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான கடற்றொழிலாளர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நமது கடற்றொழிலாளர் தீவிரவாதிகள் போல் நடத்தப்படுவதாக நாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

குச்சவெளியில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ,

கடற்தொழில் திணைக்களத்தில் முறையாக சுருக்கு வலைக்கு அனுமதி பத்திரம் பெற்று கடலுக்கு சென்ற கடற்றொழிலாளரகள் மீது இன்று கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிய கிடைக்கிறது.

சுருக்கு வலை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மைல் நிபந்தனை திருகோணமலை போன்ற குடா பகுதிகளுக்கு பொருத்தமற்ற ஒன்று என நான் பல வருடங்களாக நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் சுட்டிக்காட்டி உள்ளேன்.

இதுவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு மூல காரணம்” என்றார்.

திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குச்சவெளி பிரதேசத்திலிருந்து திருகோணமலை கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற கடற்றொழிலாளர் மீது, கடற்படையினரால் நேற்று (03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த றிஷாட் , “கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்ற அப்பாவி சமூகத்தினர் மீது, கடற்படை பாதுகாப்பு தரப்பினர் அத்துமீறு நடப்பதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்” என கூறியுள்ளார்.

திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற, கடற்றொழிலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை கண்டித்து இன்று(4) கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிண்ணியா கடற்றொழிலாளர் சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான கடற்றொழிலாளர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஏழை கடற்றொழிலாளர்களை தாக்காதே! எமது கடலில் மீன் பிடிக்க எமக்கு உரிமை இல்லையா?, கடற்றொழிலாளர் சமூகத்தை நசிக்காதே! நாளாந்தம் வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்வாதாரத்தை தேடுகின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடா?, கடற்றொழிலாளர்கள் வயிற்றில் கை வைக்காதே! போன்ற கோஷங்களை எழுப்பி, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து கடற்றொழிலாளர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை (04) காலை பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குச்சவெளி கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாலை கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதன்போது குச்சவெளி ஜாயாநகரைச் சேர்ந்த 23 வயதுடைய கடற்றொழிலாளர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுபோன்ற மிலேச்சுத்தனமான தாக்குதலை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...