16
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி: நிரூபிக்கத்தக்க ஆதாரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவு!

Share

யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் – அறிக்கைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் பொலிஸாருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்குமாறு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்றே விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, அந்தப் பகுதியை மனிதப் புதைகுழி என்று கூறுவதானால், அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகைளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி, பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், அன்றைய தினம் அந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவும் கட்டளை பிறப்பித்தார்.

இதனிடையே, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்த அகழ்வுப் பணியில் ஓர் எலும்புக்கூடு முழுமையாகவும், மற்றொன்று பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டன. எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியிலேயே இந்த எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் மின் தகன மேடை அமைப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்பு எச்சங்கள் முதன்முறையாக மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...