யாழ். மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு இன்று முதல் எரிபொருள் சீரான முறையில் விநியோகிக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து களுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டு வரும் நிலையில்,
தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் வழங்கப்படாதமையை கண்டித்தும், இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலையில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் தமது பேருந்துகள் சேவையில் ஈடுபடமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த நிலையில் உடனடியாக குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இது தரப்பினருடனும் யாழ். மாவட்ட செயலகத்தில் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது இன்று முதல் சீரான முறையில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனவும் அதன் அடிப்படையில் தான் வழமைபோல் சேவையில் ஈடுபட உள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews