நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிட முடியும் என றைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 07ம் திகதியில் இருந்து சிறைச்சாலை கைதிகள் உறவினர்களை சந்திப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றமையால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உறவினர்களுக்கு அனுமதி வழங்கவும், முடிந்தவரை E-visit முறை மூலம் பார்வையிட வசதிகளை ஏற்படுத்துமாறும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Leave a comment