“பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகள் ஒருபோதும் பாதுகாக்கப்படாது.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசு வெளியேறியதும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு தற்போதைய தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெறும் எனவும், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக மக்கள் ஒன்று கூடி அனைத்து இலங்கையர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு தீர்வைக் கோருகின்றனர் என்று தெரிவித்த அவர், நேற்று நாடெங்கும் மக்கள் வீதிக்கு இறங்கியமைக்குக் காரணம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே எனவும் குறிப்பிட்டார்.
எனவே, பொதுமக்களின் இந்தக் கோரிக்கைகளை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews