தெற்கில் தொடரும் துப்பாக்கிச்சூடு! – இன்றும் ஒருவர் கொலை

இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை

வத்தளையில் இன்று இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை – எலக்கந்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர் குறித்த இளைஞர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த இளைஞர் ராகமை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version