8MCFKgsFj5wmkr8cSgDe 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலிஸ் உத்தரவை மீறிச் சென்ற கார் மீது துப்பாக்கிப் சூடு!

Share

யாழ்ப்பாணத்தில் இருந்து முழங்காவில் பகுதியூடாக மன்னார் நோக்கி பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை(13) இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றது.

இதன் போது நவாலி மானிப்பாயை சேர்ந்த செல்வமகேந்திரன் கமலரூபன்  (வயது-36 )  என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழில் இருந்து மன்னார் நோக்கி நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில்  பயணித்த சமயம் முழங்காவில் பகுதியில் பொலிசார் வீதிச் சோதனைக்காக வழி மறித்தும் நிறுத்தாமல் சென்ற போது குறித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் மன்னார் முருங்கன் வரை பயணித்துள்ளார்.

பின் முருங்கன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...