யாழில் வெடி கொளுத்தி கொண்டாட்டம்!

VideoCapture 20220721 104035

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதையடுத்து யாழ் நகரின் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொழுத்தி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவி பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version