இயக்கச்சி காணியில் தீ! – பயன்தரு மரங்கள் நாசம்!

கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி பகுதியிலுள்ள காணி ஒன்றில் இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினால் பயன்தரு மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

குறித்த பகுதியில் உள்ள காணியில் தென்னங்கன்றுச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை வளர்ந்து பயன் தருகின்ற தருவாயில் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் பல தென்ணைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீப்பரவல் தொடர்பாக பிரதேசவாசிகள் கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவிற்கு தெரிவித்ததை அடுத்து கரைச்சி பிரதேச சபையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

இருப்பினும் தீப் பரவல் குறித்த காணியில் காணப்பட்ட பனை மரங்களில் பரவியதால் பனைமரங்களில் ஏற்பட்ட தீ பயன்தரு தென்னை மரங்களில் பரவி தென்னை மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

இதனால் குறித்த காணி உரிமையாளர்கள் பெரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

IMG 20220605 WA0025

#SriLankaNews

Exit mobile version