திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

25 690c956ec39eb

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண் பரிசோதனை நிலையத்தில் இன்று (நவம்பர் 06) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, மின் ஒழுக்கு (Electrical Short Circuit) காரணமாக இந்தக் கச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த கண் பரிசோதனை நிலையத்தின் மேல் மாடிப் பகுதியில் தங்கியிருந்த தாதியர்களின் விடுதி அறையும் தீப்பற்றி எரிந்துள்ளது.

உடனடியாகச் செயற்பட்ட தீயணைப்புப் பிரிவினர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருகோணமலைத் துறைமுகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version