நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி நிலையைக் கவனத்தில் கொண்டு அரசின் செலவுகளில் 5,300 கோடிரூபா குறைக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கினறன.
அந்த செலவுகள் குறைப்புக்குள் ஜனாதிபதியின் செலவும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புது வருடத்துக்கு மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசின் புதிய வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்துள்ளது. அது தொடர்பில் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது தெளிவுபடுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் அரசின் செலவுகளை முடிந்தளவு குறைத்து மக்களுக்கான நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
#SriLankaNews