இறுதித் தீர்மானம் – கூடுகிறது ஆணைக்குழு

Provincial Council election 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) கூடவுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு தினங்களில் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version