tamilni 385 scaled
இலங்கைசெய்திகள்

சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு இறுதி தீர்மானம்

Share

கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (19) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில், வைத்தியர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவையில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து சுகாதார அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக எழுத்துமூலமாக வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடனான கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 69222852bdb1d
செய்திகள்உலகம்

கூகுள் மேப்ஸில் புதிய அம்சங்கள்: Gemini AI இணைப்புடன் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி!

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் (Google Maps) இருந்தால் போதும், நாட்டின் எந்தப் பகுதிக்கும்...

New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...