யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி! தென்னிந்திய திரைப்பட நடிகை புகழாரம்
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி! தென்னிந்திய திரைப்பட நடிகை புகழாரம்

Share

யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி! தென்னிந்திய திரைப்பட நடிகை புகழாரம்

யாழ்ப்பாணம் என்பது சைவமும் தமிழும் கொட்டி கிடக்கின்ற ஒரு அருள் பூமி என தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தாவாடி அம்பலவான முருகன் ஆலயத்தின் திருமஞ்ச திருவிழா ( 29.07.2023) இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் உறவுகள் இருக்கும் வரை யாரும் எம்மை அசைக்க முடியாது

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி. இலங்கை முழுவதுமே முருகனின் கடாட்சம் தான் அமைந்துள்ளது. இப்போதுதான் ஆங்காங்கே விகாரை கட்டுகிறார்கள்.

சைவ சமயமும் இங்கேதான் இருக்கிறது தெற்கில் கதிர்காமம் முதல் வடக்கே நல்லூர் யாழ்ப்பாணம் வரை எல்லாமே அவன் அருள் மட்டுமே இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.

தமிழ் கடவுள் முருகன் இருக்கும் வரை தமிழ் உறவுகள் இருக்கும் வரை யாரும் எம்மை அசைக்க முடியாது. இந்த கோயிலுக்கு உள்ளே வரும் பொழுது அருமையான மந்திரங்கள் எல்லாம் ஓங்கி ஒலித்தன .

அதேபோன்று தமிழ் நாதஸ்வர கலைஞர்களின் அற்புத இசையில் எம்பெருமான் வளம் வரும் காட்சி அற்புதமானது. தமிழ்நாட்டில் எல்லாம் இவ்வாறு கிடையாது.

எல்லாவற்றையும் அரசு எடுத்துக் கொண்டது அதற்குப் பிறகு உண்டியலில் பணம் நிரப்புவதை மட்டுமே அவர்கள் குறியாக கொண்டிருந்தார்கள் இப்படியான அருமையான காட்சிகள் எல்லாம் அங்கே குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

Share

9 Comments

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...