தெற்கைத் தொடர்ந்து யாழிலும் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்!

நாட்டில் பொருட்கள் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

தெற்கில் பரவலாக போராட்டங்கள் முன்னெடுத்து வரும் நிலையில், தபோது வடக்கிலும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்களை முன்வருமாறு கோரியும் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது .

IMG 20220402 WA0026

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் நடந்த இந்த போராட்டத்தில் மண்ணெண்ணெய் , பெற்றோல் , சமையல் எரிவாயு , பாண் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

#SriLankaNews

Exit mobile version