நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள மலேரியா நோய்!
நாட்டில் மீண்டும் மலேரியா நோய் தலைதூக்கியுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரை நாட்டின் பல பகுதிகளில் இருந்து 20 மலேரியா வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர்களில் ருவாண்டா, தெற்கு சூடான், உகண்டா, தான்சானியா, சியரா லியோன் மற்றும் கினியா ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மலேரியா தொடர்பான பிரச்சினைக்கும் 24 மணிநேரமும் 071 – 284 1767 மற்றும் 0117 626626 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment