இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

Share
16 11
Share

நெற்பயிற்செய்கை செய்யும் விவசாயிகளுக்கு நிதி மானியத்துடன் கூடுதலாக 25000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எம்.ஓ.பி உரத்தையும் இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பெரும் போகத்தின் போது, அரசாங்கம் ரூ. 25,000 உர மானியத்தையும் இலவச சிவப்பு தூள் உரத்தையும் வழங்குவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதன்படி, 2024 ஒக்டோபர் 01 முதல் 2025 பெப்ரவரி 01 வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உர மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ரூ. 25,000 உர மானியம் இரண்டு கட்டங்களாக, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல் தவணை ரூ. 15,000 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விவசாயிகளின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு பயனுள்ள அமைப்பை செயல்படுத்த அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...