பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை, 90 நாட்கள் தடுப்புக் காவலில் (Detention Order) வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்திக்கு, குறித்த பெண் சட்டத்தரணி, துப்பாக்கியை மறைத்துக்கொண்டு வருவதற்குத் தனது சட்டப் புத்தகத்தை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட சட்டத்தரணியிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே 90 நாட்கள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

