கட்டணங்கள் குறைக்கப்படாது!

8f91fb36 b303c494 8f6cd2ab threewheel

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டாவை அரசாங்கம் இரட்டிப்பாக்கிய போதும், கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை என்று முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளாந்தம் 5 லீற்றர் அடிப்படையில் 6 நாட்களுக்கு 30 லீற்றர் பெற்றோல் வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதும் 5 லீற்றர் பெற்றோல் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உராய்வு நீக்கி எண்ணெய், டயர்கள், டியூப்கள், பட்டரிகள் மற்றும் வாகன சேவைக் கட்டணங்கள் மீதான வரிகள் இன்னும் அதிகமாக இருப்பதால், சேவையைத் தொடர இந்த அதிகரிப்பு உதவாது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

480 ரூபாயாக இருந்த பெற்றோல் 3 தடவைகளில் 370 ரூபாய் வரை குறைக்கப்பட்ட போதும் தமக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படாமை காரணமாக கட்டணத்தை குறைக்க முடியவில்லை என்றும் சங்கம் தெரிவித்தது.

மேல் மாகாண முச்சக்கர வண்டிகளுக்கு நவம்பர் 1ஆம் திகதி முதலும் ஏனைய மாகாண முச்சக்கர வண்டிகளுக்கு நவம்பர் 6ஆம் திகதி முதலும் 10 லீற்றர் எரிபொருள் வழங்குவதற்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என வலுச்சக்தி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version