ரணிலுடன் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் கைகோர்க்க பிரதமர் அழைப்பு
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் கைகோர்க்க பிரதமர் அழைப்பு

Share

ரணிலுடன் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் கைகோர்க்க பிரதமர் அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தமிழ்க் கட்சிகளும் கைகோர்த்துச் செயற்பட முன்வர வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இது விவாதம் செய்யும் நேரம் அல்ல நாட்டுக்காக – மக்களுக்காக கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலமே இது.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது முன்மொழிவுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றியுள்ளார். இந்த உரை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த உரை.

எனவே, அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ள சகல வேலைத்திட்டங்களுக்கும் தமிழ்க் கட்சிகள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும். அப்போதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை நாம் விரைந்து காண முடியும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

24 670f93e6eb8ad
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது: வாகன முறைகேடு தொடர்பாக CID நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (30) கைது...

25 6949732ef2e8e
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல்: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

‘டித்வா’ (Titli) புயல் அனர்த்தத்தின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின்...

images 1 9
செய்திகள்அரசியல்இலங்கை

மாணிக்கக்கல் ஏற்றுமதியில் பாரிய வருமான இழப்பு: சட்டவிரோதப் போக்கைக் கட்டுப்படுத்த புதிய வரி நடைமுறை!

இலங்கையில் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையில் நிலவும் நிருவாகச் சிக்கல்கள் காரணமாக, நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய...