தந்தை செல்வாவின் பிறந்தநாள் நினைவு நிகழ்வு யாழ். மத்திய கல்லூரியில் அனுஷ்டிப்பு!

தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு இன்றைய தினம் யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இன்று காலை 9.30 மணியளவில் யாழ் மத்திய கல்லூரியில் உள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் தலைமை அறங்காவலர் சா.செ.ச.இளங்கோவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, மனித உரிமை செயற்பாட்டாளர் ஷ்ரீன் அப்துல் ஸரூர், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எழில்வேந்தன், தமிழ்த் தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம், உட்பட தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் , மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

20220331 100249

#SriLankaNews

Exit mobile version