மகனால் தாக்கப்பட்ட தந்தை கிளி.யில் உயிரிழப்பு!

1681879592 murder 2

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் மகனால் தாக்கப்பட்ட தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.00 மணியளவில் தந்தை தாய் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவே உயிரிழந்துள்ளார்.

தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இறத்த தந்தையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இறந்தவர் பிச்சைமுத்து இராமசாமி 64 வயதுடையவர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version