யானை தாக்கி விவசாயி
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் யானை தாக்கி விவசாயி பலி!

Share

மட்டக்களப்பு, கரடியனாறு – ஈரக்குளத்தில் யானை தாக்கி விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது எனக் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தங்கராசா (வயது 55) என்பவரே பலியாகியுள்ளார்.

இந்த நபர் பயிர்ச்செய்கை நடவடிக்கையிலும், மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருபவர். நேற்றுப் பால் கறப்பதற்காகத் தனது மாடுகளைத் தேடிச் சென்றபோது, மறைந்திருந்த யானையொன்று அவரைத் தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற பிரதேசத்துக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சடலத்தைப் பார்வையிட்டார்.

சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...