விவசாயி தற்கொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொருளாதார நெருக்கடி – விவசாயி தற்கொலை!

Share

பொருளாதார நெருக்கடி காரணமாக 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கல்கமுவ – வலஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடிசையொன்றில் மனைவியுடன் வசித்து வந்த அவர், சேனை விவசாயியாகவும், கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார்.

பாரிய வயல்வெளியில் விவசாயம் செய்து வந்தார் எனவும், உரம் இல்லாத காரணத்தால் அவரது நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் மனைவிக்கு முறையாக உணவைக் கூட வழங்க முடியாத அவலநிலையில் நீண்ட நாட்களாக அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

அவரது மனைவி கூறுகையில்,

“கடந்த 29ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து பிரதேச மக்களின் உதவியுடன் தேடியபோது, மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாகக் காணப்பட்டார்” – என்றார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...