18 21
இலங்கைசெய்திகள்

பிரபல நடிகையின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

Share

வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதாள உலகத்தினரின் கைகளில் சிக்கியதாகக் கூறப்படும் T-56 துப்பாக்கிகள் தொடர்பில் விசாரிக்கும் சிறப்பு பொலிஸ் குழு, பிரபல நடிகை ஒருவரின் வீட்டையும் பரிசோதனை செய்துள்ளது.

நடிகையின் மகனுக்கு துப்பாக்கி விற்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரபல நடிகையின் வீடு முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட போதிலும், துப்பாக்கி கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நடிகை அரசியலுடன் தொடர்புகளை கொண்ட ஒருவராகும். மேலும் அவரது கணவரின் வணிகங்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் போது சில அரசாங்க அமைச்சர்களிடமிருந்து சலுகைகளை பெற்றதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.

குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையில், முகாமில் இருந்து 73 T-56 துப்பாக்கிகள் உட்பட சுமார் 75 துப்பாக்கிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆயுதங்களிலிருந்து 36 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 39 ஆயுதங்கள் மீட்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த துப்பாக்கி கடத்தல் பற்றிய தகவல் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று தகவல் தெரியவந்தது.

பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹோமாகம, பிடிபனவில் உள்ள ஒரு வணிக இடத்தை சோதனை செய்தபோது, ​​அங்கு 11 T-56 துப்பாக்கிகள் மற்றும் ஒரு T-81 துப்பாக்கி உட்பட ஏராளமான இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Share
தொடர்புடையது
நிலந்த பிரேமரத்ன
இலங்கை

நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமனம்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் இந்த நியமனத்துடன்...

death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...