மனைவியின் கண் முன்னால் கணவன் வெட்டிப் படுகொலை
இலங்கைசெய்திகள்

மனைவியின் கண் முன்னால் கணவன் வெட்டிப் படுகொலை

Share

மனைவியின் கண் முன்னால் கணவன் வெட்டிப் படுகொலை

கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் குடும்பஸ்தரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (13.08.2023) இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியான இரண்டு பிள்ளைகளின் தந்தையே (வயது 42) சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களுடன் வந்து இறங்கிய நால்வர் கொண்ட கும்பல், வீட்டுக்குள் புகுந்து குடும்பஸ்தரை சராமரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

மனைவியின் கண் முன்னால் கணவனைக் குறித்த கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளது. மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அயல்வீட்டுக்காரர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், கொலையாளிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வட்டிக்குப் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 696cda61cd108
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி-க்களின் ஓய்வூதிய ரத்து: உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு; இரகசியத் தீர்ப்பு சபாநாயகருக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...

electrician at work stockcake
செய்திகள்இலங்கை

இனி எலக்ட்ரீஷியன்களுக்கு உரிமம் கட்டாயம்! NVQ தகுதி இன்றி மின் வேலைகள் செய்யத் தடை!

இலங்கையில் மின் பாதுகாப்பு மற்றும் பொறியியல் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சார வல்லுநர்களுக்கான (Electricians) புதிய...

articles2Fr9PnSL7cktbisfxCs5bm
செய்திகள்உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து இன்று (22) உத்தியோகபூர்வமாக விலகியது அமெரிக்கா! நிதி நெருக்கடியில் WHO!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக...

Mweb Maldives 630x375 1
செய்திகள்உலகம்

மாலைத்தீவு நாட்டினருக்கு நற்செய்தி: இலங்கைக்கு வர 90 நாள் விசா விலக்கு அளிப்பு!

வருகை அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் மாலைத்தீவு குடிமக்களுக்கு 90 நாள் வருகை விசா...