இலங்கைசெய்திகள்

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர்

Share
18 16
Share

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர்

யாழில் (Jaffna) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு (Colombo) நோக்கி சென்ற கடுகதி தொடருந்தின் முன் பாய்ந்தே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (13) மதியம் 2.30 மணியளவில் மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள தொடருந்து பாதையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான, திருமணமாகி இரண்டு மாதங்களான நவரத்தினம் நவாஸ்கரன் என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...