பிஸ்கட்டுக்களின் விற்பனையில் வீழ்ச்சி!

Biscuits in Ghana

பிஸ்கட் விலை உயர்வால் பிஸ்கட்டுக்களின் விற்பனையும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில கடைகளில் பிஸ்கெட்டுகளுக்கும் விலைக்கழிவு வழங்கப்படுகிறது.

அதீத விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் பிஸ்கட் கொள்வனவை புறக்கணிப்பதாக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், விற்பனை குறைந்துள்ளது. இதனால் நுகர்வோர் பிஸ்கட் உட்கொள்வதை நிறுத்தினால் தமது தொழிற்சாலைகளை மூட நேரிடும் என இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் எஸ்.எம்.டி. சூரிய குமார வாடிக்கையாளர்கள் பிஸ்கட் வாங்குவதை நிறுத்தினால், அவர்கள் தங்கள் தொழிலை நிறுத்திவிட்டு வேலையையும் இழக்க நேரிடும் என்று கூறினார்.

பிஸ்கட்டுக்களுக்கான மா மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் அதன் உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை எனவும், இலாபம் மிகக்குறைவான வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை கடந்த காலங்களில் கிட்டத்தட்ட இருநூறு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version