எரிபொருள் கொள்வனவில் வீழ்ச்சி!

Rising fuel prices again

மக்கள் எரிபொருள் பெறுவதில் குறைவு ஏற்பட்டுள்ளது என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்தார்.

QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மக்களின் எரிபொருளுக்கான அணுகல் குறைந்துள்ளதுடன் இதற்கு எரிபொருள் விலை அதிகரிப்பே இந்நிலைமைக்கு முக்கிய காரணமாகும். வாராந்த எரிபொருளை வாரத்திற்கு ஒரு முறை பெற்றுக் கொள்ளும் திறன் மக்களுக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு காருக்கு 20 லீற்றர் பெற்றோல் பெறுவதற்கு வாரத்திற்கு 9,000 ரூபா வீதம் 36,000 ரூபா தேவைப்படுவதால், இவ்வாறான செலவுகளை மக்களால் மேற்கொள்ள முடியாது என குமார ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, 6 மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒதுக்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க தேசிய எரிபொருள் உரிமம் அறிமுகப்படுத்தப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version