உயர்தர பரீட்சையில் போலி அடையாள அட்டை – பிக்கு கைது!!

pikku todayjaffna 1

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் போலி அடையாள அட்டையை பயன்படுத்த முயற்சித்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்மாடுவ – வெலிகம பிரதேசத்தில் உள்ள பிக்கு ஒருவர் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி உயர்தர பரீட்சை எழுத முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் பரீட்சை மண்டபத்தில் நான்காம் நாள் க.பொ.த உயர்தர சிங்கள பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாளுக்கு தோற்றிய போதே பரீட்சை மண்டப அதிபரால் பிக்கு பிடிக்கப்பட்டார்.

மஹஹில்ல இசுருபுர பெலியத்த பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பிக்குவை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#SrilankaNews

 

 

Exit mobile version