பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலம் இன்றுடன் (25) நிறைவடைய இருந்த நிலையில் அவருக்கு மூன்று மாத கால பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews