பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு?

police edited

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் இம்மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி, அவர் ஓய்வு பெறுவது தொடர்பான ஆவணங்களை அண்மையில் கையளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பதே சிறந்தது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி அடுத்த வாரத்தில் முடிவு எடுக்கப்படும்.

இதேவேளை, தற்போதைய பொலிஸ்மா அதிபர் ஓய்வு பெற்றதையடுத்து, பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, தேஷபந்து தென்னகோன், பிரியந்த வீரசூரிய, அஜித் ரோஹன ஆகியோர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version