5 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நீடித்துள்ளது.

அதற்கமைய, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை, நாளை மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளைய தினம் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை இலங்கையில் நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version