நானுஓயா – கிளாசோ மேற்பிரிவில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்றை தினம் (18.04.2023) பிற்பகல் நானுஓயா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நானுஓயா கிளாசோ தோட்டத்தில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்புறத்தில் பரிசு போல பொதியிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்பட்டுள்ளது.
குறித்த பொதியை மீட்டு பொலிஸார் சோதனையிட்ட போது அதில் பெட்ரோல் குண்டுகள் போன்று வடிவமைக்கப்பட்ட வெடிக்கும் திரவ பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
#srilankaNews
Leave a comment