விலைபோகும் அரசியல்வாதிகள் வீழ்வார்கள்!

Handunnetti

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்துள்ள சர்வக்கட்சி அரசு எனும் வலையில், விலைபோகும் சில அரசியல்வாதிகள் நிச்சயம் வீழ்வார்கள் – என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துனெத்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமது அணியில் இருந்து பிரிந்து சென்றவர்களை வளைத்துபோடுவதற்காக அமைச்சு பதவி குறித்து ரணில் பேரம் பேசிவருகின்றார். அத்துடன், ஊழல், மோசடிகளை காட்டி, மொட்டு கட்சியினரின் ஆதரவையும் திரட்டியுள்ளார்.

உரிய நேரம்வரும்போது விமல்வீரவன்ச, உதயகம்மன்பில, ரத்தன தேரர் போன்றவர்களும் ரணிலின் பிடிக்குள் சிக்குவார்கள். ஆளுங்கட்சி பக்கம் சாய்ந்துவிட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமும்கூட.

இப்படியான அரசியல் நிகழ்ச்சி நிரல் கொண்ட அரசில் நாம் எப்படி இணைவது, எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version