அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக மன்னாரில் இரு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேசாலையைச் சேர்ந்த வித்திராஸ் மௌசாட் (வயது – 35), தலைமன்னாரைச் சேர்ந்த மகேந்திரன் பிரதீப் (வயது – 26) ஆகிய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
திடீர் சுகயீனமடைந்துள்ளனர் என்று தெரிவித்து மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் அனுமதிக்க முன்பே உயிரிழந்துவிட்டனர் என்று வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஒரு வாகனத்தில் 4 பேர் கொழும்பு நோக்கிப் பயணிக்க முற்பட்ட வேளை நோய்வாய்ப்பட்டனர் என்று தெரிவித்து மேற்படி இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அதிக போதைப்பொருள் பாவனையே மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் இருந்த எஞ்சிய இருவரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன. அதேவேளை, உயிரிழந்த இருவரினதும் பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன.
#SriLankaNews