திட்டமிட்டபடி பரீட்சைகள் நிகழும்! – கல்வி அமைச்சு அறிவிப்பு

Dinesh Gunawardena

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சைகள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை. மேலதிக கடதாசிகளை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, பரீட்சைகள் பிற்போடப்படும் என வெளியாகும் தகவல்கள் ஏற்புடையவை அல்ல. திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சைகள் நடத்தப்படும்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version