கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை !

கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை !

மன்னார் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் கொவிட் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

30 வயதுக்கு அதிகமானவர்களுக்கு அண்மைக்காலமாக கொவிட் தடுப்பூசிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. சுகாதார துறையினரும் விரைவாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி வந்தனர்

இந்நிலையில் மன்னார் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதார பரிசோதகர்கள் உதவியோடு தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கான அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருவதுடன் 30 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெறாதவர்களுடைய விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடி, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் சந்தியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடி, வங்காலை – நானாட்டான் பிரதான வீதியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடி உள்ளடங்களாக பல்வேறு சோதனைச் சாவடிகளில் இராணுவத்தின் உதவியுடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கொரோனா அட்டைகளை பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் அல்லது அன்டிஜென் , பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

mannar vaccination card 1 600x400 1

Exit mobile version