Sivagnanam Sritharan
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சியில், முன்னாள் போராளிகள் TID யினரால் விசாரணை..!!

Share

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்னாள் போராளிகள், சமூகநல செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023.03.24 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைப் பதிவுசெய்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

விவேகானந்தநகர், கிளிநொச்சியைச் சேர்ந்த, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான திரு.அமாவாசை மதிவண்ணன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளரும், கனகபுரம் மாவீரர் பணிக்குழுவின் செயலாளருமான திரு.வீரவாகு விஜயகுமார், உருத்திரபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த, கிளி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தங்கவேலு கண்ணபிரான், இரத்தினபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான திரு.சிவப்பிரகாசம் ஜெயதீபன் ஆகியோரே அண்மைய நாட்களில் பரந்தனிலும், இரணைமடுவிலுமுள்ள TID அலுவலகங்களுக்கு அழைக்கப்பட்டு பலமணிநேர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெற்று, நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டியுள்ள நெருக்கடி நிலையிலும் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக சமூகமயப்பட்டு வாழும் முன்னாள் போராளிகளும், தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளின் செயற்பாட்டாளர்களும், சமூகநலப் பணிகளில் ஈடுபடுவோரும் இன்னமும் அச்சம் மிகுந்த சூழலிலேயே இந்த நாட்டில் தமது வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் –  என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...