எதியோப்பியாவில்கூட வாரம் ஒரு நாள்தான் எரிவாயு விநியோகம்! – கூறுகிறார் பந்துல

Bandula Gunawardena

” வேகமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடான எதியோப்பியாவில்கூட வாரம் ஒரு நாள்தான் எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது. இரு நாட்கள்தான் எரிபொருள் வழங்கப்படுகின்றது.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

” கொவிட் பிரச்சினைக்கு பின்னர் உலகளவில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

உணவு தட்டுப்பாடு ஏற்படும் என சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 1930 இற்கு பிறகு இப்போதுதான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version