இலங்கையின் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு அவசரகாலச் சட்டம் நிச்சயமாக உதவாது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாட்டில் இலங்கைப் பிரஜைகள் கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை எவ்வாறு முழுமையாக அனுபவிக்கின்றார்கள் என்பதை ஒரு மாத கால அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டியுள்ளன என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் எதிர் விளைவை ஏற்படுத்தும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் ருவிட்டர் பதிவில் கூறியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஐரோப்பிய ஒன்றியம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
#SriLankaNews