இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) வழங்கவிருந்த நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோ வரை அதிகரித்துள்ளதுடன், முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் இன்று (17) அதிகாலை இலங்கையை வந்தடைந்தன.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான போயிங்-747-400 (Boeing-747-400) ரக விசேட சரக்கு விமானம் மூலம் ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளின் மனிதாபிமான உதவிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரணப் பொருட்கள். கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் மெத்தைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்.
இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக ஜேர்மனிய பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிப்போன் மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
முதலில் 1.8 மில்லியன் யூரோவாக அறிவிக்கப்பட்ட இந்த உதவித் தொகை, தற்போது 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.