அத்தியாவசிய சேவைகள் – வர்த்தமானி வெளியீடு

ranil

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர்  கையெழுத்திட்டுள்ளார்.

எந்த துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், எண்ணெய், எரிபொருட்கள் அல்லது நிலக்கரி ஆகியவற்றை வெளியேற்றல், தரையிறக்குதல், சேமித்தல்,  விநியோகம் செய்தல் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.

சுங்க கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக (அத்தியாயம் 235), வீதிகள், பாலங்கள், கல்வெட்டுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் பாதைகள் உட்பட வீதிகள், ரயில் அல்லது விமானம் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தலையும் ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version